ஓம் நமச்சிவாய அன்னதான அறக்கட்டளையின் சார்பில் தீபாவளி முன்னிட்டு ஏழைகள் ஆதரவற்றவர்களுக்கு வேஷ்டி சேலை வழங்குதல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 October 2024

ஓம் நமச்சிவாய அன்னதான அறக்கட்டளையின் சார்பில் தீபாவளி முன்னிட்டு ஏழைகள் ஆதரவற்றவர்களுக்கு வேஷ்டி சேலை வழங்குதல்!

ஓம் நமச்சிவாய அன்னதான அறக்கட்டளையின் சார்பில் தீபாவளி முன்னிட்டு ஏழைகள் ஆதரவற்றவர்களுக்கு வேஷ்டி சேலை வழங்குதல்

குடியாத்தம் ,அக்27-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஓம் நமச்சிவாயா அன்னதான அறக்கட்டளையின் சார்பில் தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற ஏழைகளுக்கு சுமார் 50
நபர்களுக்கு மேல்  இலவச வேட்டி சேலை வழங்குதல் மற்றும் மகா ஆர்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் சிவ திரு தா பாபுசிவம் அவர்கள் தலைமை தாங்கினார், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேலூர் மாவட்ட துணை தலைவர் ஆர் அண்ணாமலை வரவேற்புரை ஆற்றினார்,  விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட இணை செயலாளர் மா.சி கார்த்தி நகரத் தலைவர் சரவணன் நகரச் செயலாளர் சங்கர் பசு பாதுகாப்பு தலைவர் சந்திரசேகர் யுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலாளர் வாலாஜா திரு J. ராஜாஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழைகள் ஆதரவற்ற ஆண்கள் பெண்கள் ஆகியர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி மகா ஆர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி  வைத்து சிறப்புரையாற்றினார் 
அறக்கட்டளை உறுப்பினர்கள் சோமசுந்தரம் முருகன் வடிவேல் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து  கொண்டனர் அறக்கட்டளை பொருளாளர் திருமதி ராதிகாபாபுசிவம்  நன்றி கூறினார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad