வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு பள்ளி அருகே கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சிறை பிடித்த சமூக ஆர்வலர்.
பேர்ணாம்பட்டு ,அக் 29-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிகுத்தி ஊராட்சி 1-வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப் பள்ளி அருகில் குப்பை கோழி கழிவுகள் ஏற்றி வந்த குப்பை வண்டியை அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அஸ்லாம் பாஷா, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் தடுத்து நிறுத்தினார்கள் பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவி சோக்கன் ஆகியோர்கள் நேரில் வந்து சுமுகமாக பேச்சுவார்த்தை செய்து அந்தப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்பு வாகனத்தை விடுவித்தார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment