நியாய விலை கடையில் உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கல்.
குடியாத்தம் ,அக் 29-
முதியோர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி மற்றும் குடியாத்தம் நகரம் 14. 15 வார்டு பகுதியில் நியாயவிலை கடையில் உதவித்தொகை பெற்று வரும் முதியோருக்கு விலையில்லா இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் செளந்தரராஜன் கலந்து கொண்டு வேஷ்டி சேலைகளை வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில்
வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகர மன்ற உறுப்பினர்கள் சுமதி மகாலிங்கம் நளினி தமிழரசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகா பரத் அமுதா லிங்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி துணைத் தலைவர் அஜித் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அகோரன் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் அனைவரும் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment