தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி தர்ணா போராட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 October 2024

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி தர்ணா போராட்டம்!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி தர்ணா போராட்டம்

வேலூர் ,8-

வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டம் நடைபெற்றது இன்றைய தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.டி.ஜோஷி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா வேலு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் தொடக்க உரையாற்றினார்.
 தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆ.சேகர் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா. ஜனார்த்தனன் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர் .ஜெயக்குமார் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர்  சங்க மாவட்ட செயலாளர் ஜீவா மாநில செயலாளர் வேந்தன் தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம். சினேகலதா அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம். எஸ்.தீனதயாளன் செய்தி தொடர்பாளர் வாரா உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர் போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட  உரிமைகளை வழங்க வேண்டும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் ஊர் புற நூலகர்கள் எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலம் வரை ஊதியம் தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பெரும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காவல் துறை ஊதியம் வழங்க கோருதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் காலி பணியிடங்கள் அனைத்தையும் காலமறை ஊதியத்தில் நிரப்பப்பட வேண்டும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குறைக்க வேண்டும் அலுவலக பணி நேரத்திற்கு பின்பும் அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்.
 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad