வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் குறைதீர்வு நாள் கூட்டம் ! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 October 2024

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் குறைதீர்வு நாள் கூட்டம் !

வேலூர் ,அக்16-

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (16-10-2024) புகார்தாரர்களை நாற்காலியில் உட்கார வைத்து கனிவுடன் குறைகளை கேட்டறிந்து, 31 மனுக்களை பெற்று உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மற்றும் துணை கண்காணிப்பாளர் இருதயராஜ் மற்றும் அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு பணிகள்,  மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் சிறந்த முறையில் மக்கள் புகார் தாரர்களின் குறைகளை தீர்க்கப்படுவதாக பாதிக்கப்பட்டு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad