வடகிழக்கு பருவமழை யையொட்டி எதிர் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம்
குடியாத்தம்,அக்-16
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டத்துக்குட்பட்ட குடியாத்தம் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் ஆகிய தாலுகாகளில் வடகிழக்குப் பருவமழை யையொட்டி எதிர்கொள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் காந்தி நகரில் உள்ள சொற்களக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமை வகித்தார் தாசில்தார்கள் மெர்லின் ஜோதிகா வடிவேலு சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்து தாலுகாவில் அமைந்துள்ள மழை மானியை சம்பந்தப்பட்ட விவரங்களை அந்தந்த தாசில்கள் தணிக்கை செய்து மழை மாளிகை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை தாசில்தார்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மண்டல அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, வடக்கு கிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படாத வகையில் சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும்.
வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்கும் வகையில் நிவாரண முகாம்களை தாசில்தார்கள் ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, கட்டடத்தின் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள், கால்நடை பாதிப்பு , முறிந்து விழும் மரங்கள், கிளைகளை வெட்டி அகற்ற அதற்கான தனித்தனியாக முதல் நிலை பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment