வேலூர் ,அக் 15-
வேலூர் மாவட்டம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி
நடவடிக்கை எடுக்க உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் எதிரிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையை பிறப்பித்து வரும் நிலையில், பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வழக்கில் கைதாகி, நீதிமன்ற காவலில் இருந்துவரும் எதிரிகள், 1) அபிஷேக், வ/31, த/பெ.மகாலிங்கம், பள்ளிகுப்பம், குடியாத்தம், 2) விமல், வ/24, த/பெ.குணசேகர், கோட்டை பின்புறம், வேலூர். என்பவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணையை பிறப்பித்துள்ளார். மேற்படி ஆணைகளை, பாகாயம் வட்ட காவல் ஆய்வாளர் நாகராஜன் இன்று 16.10.2024-ம் தேதி வேலூர் மத்திய சிறைச்சாலையில் சமர்பித்தார். மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment