விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 October 2024

விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து!

விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு காட்பாடி ரெட்கிராஸ் பாராட்டு

காட்பாடி,அக் 27-

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் அமைந்துள்ள விஐடி பல்கலை 
கழகத்தின் துணைத் தலைவரும் வேலூர் சர்வதேச பள்ளியின் தலைவரும், வேலூர் பசுமை இயக்கத்தின் தலைவரும் பிறந்த நாள் விழா காணும் ஜி.வி.செல்வத்திற்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளையின் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
       
இந்த நிகழ்வில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை அவைத்தலைவர் செ நா.ஜனார்த்தனன் சால்வை அணிவித்து பாராட்டினார்.  அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  நிர்வாகிகள் மருத்துவக்குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து, யூத்ரெட்கிராஸ் குழு தலைவர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், வி.காந்திலால்படேல், பி.என்.ராமச்சந்திரன், ரமேஷ்      செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி, ஆகியோரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
காட்பாடி வட்ட ரெட்கிராஸ் மிக சிறப்பாக செயல்படுவது பாராட்ட தக்கது ரெட்கிராஸ் பணி தொடர விஐடி துணைத்தலைவர் முனைவர்
ஜி.வி.செல்வம் பாராட்டினார்.  மேலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், காந்திநகர் கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பிலும் நிர்வாகிள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
                
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad