பிரம்மபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 October 2024

பிரம்மபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!

பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!

காட்பாடி ,அக் 27-

      வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி குறித்து வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையுயின் காட்பாடி நிலையம் காட்பாடி ரெட்கிராஸ் கிளையும் இணைந்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் தீக்காயங்களை தவிர்ப்போம் தீக்காயங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து துண்டறிக்களை வழங்கி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
       நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.சதீஸ் தலைமை தாங்கினார் இந்த நிகழ்வில் காட்பாடி தீயணைப்பு மீட்பு பணித்துறையின் நிலைய அலுவலர் எஸ்.முருகேசன் சிறப்பு தீ தடுப்பு நிலைய அலுவலர் தணிகைவேல்  தீயணைப்பு வீரர்கள் வி.தீரன், என்.பழனி, எஸ்.பிரகாஷ் பரத் ஆகியோர் கொண்ட குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர் இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை அவைத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.      
       உதவி தலைமை ஆசிரியர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார் வரவேற்றார்.  மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், பி.என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
       பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட, ஜூனியர் ரெட் கிராஸ் இயக்க, மாணவர் காவல் படை மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி இணை செயல் பாடுகளின் மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி 
மாணவ மாணவிகள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பயிற்சி பெற்றனர். இருபால் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் பங்கேற்றனர் பெரியவர்கள் முன்னிலையில் பட்டாசு வெடிப்போம், பட்டாசு தீக்காயத்தின் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்வோம், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிப்போம், பட்டாசுகளை சட்டை பைகளில் வைத்திருக்க மாட்டோம், கைகளில் பிடித்து பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், தீ விபத்து இல்லா தீபாவளியை கொட்டாடுவோம் என்று உறுதிமொழி எடுத்கக்கொண்டனர்.
       பள்ளி மாணவ மாணவிகள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து துண்டறிக்கைகளை மாணவிகளுக்கு வழங்கி பயிற்சியளித்தனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad