குடியாத்தம் புவனேஸ்வரிப் பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேசன் பள்ளியில் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
குடியாத்தம் ,அக 30-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு மற்றும் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இவ்விழா வை பள்ளியின் தாளாளர் வி.சடகோபன் MA., M.phil அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். பள்ளியின் முதல்வர் மேகலா DTEd.,MA., MEd., அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் செயலாளர் இரம்யா கண்ணன் MBA., M.Com., BEd., அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக S.சரவணன் (ஆய்வாளர், தீயணைப்பு துறை,குடியாத்தம்) அவர்கள் தலைமையில் சிறப்புரை ஆற்றினார்.
மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படும் பொழுது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தத்ருபமாக செய்முறை விளக்க நிகழ்ச்சி நிகழ்த்தி காட்டினர் . தீபாவளி நாளில் ஏற்படும் காற்று மாசுபாட்டை பற்றி தாளாளர் அவர்களும் பட்டாசு வெடிப்பதால் மனிதனுக்கும் சுற்றுபுற
சூழல்களுக்கும் ஏற்படும் இன்னல்களை பற்றி மாணவர்கள் இந்நாளில் தீவிபத்துகளால் ஏற்படும் தீமைகளையும் பள்ளியின் ஆசிரியர்கள் நாடகம் வழியாக விளக்கியும் காட்டினர். பள்ளியின் துணை முதல்வர் ராஜ்குமார் DTEd., MA., MEd., அவர்கள் நன்றியுரை கூற விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment