குடியாத்தம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
குடியாத்தம்,நவ 1-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் முட்டு கூர் கிராமம் தட்டாங்குட்டை பகுதியில் வசிக்கும் பவித்ரா (வயது 31) க/ பெ குமரேசன் என்பவர் 31.10.2024 நேற்றிரவு 8.30 மணியளவில் குடும்ப தகராறு காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் .
உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதனையில் தெரிய வந்தது இறந்த பவித்ரா இந்து வள்ளுவர் வகுப்பைச் சேர்ந்தவர் எனவும் அவரது கணவர் இந்து வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர் எனவும் திருமணம் ஆகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிறது எனவும் விசாரணையில் தெரியவருகிறது.
குமரேசன் டிராக்டர் ஓட்டுனர் ஆவார் இவர்களுக்கு பிரணிதா (வயது 10) ஷர்மிதா (வயது 8) ராகவன்-(வயது 6)ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர் .இறந்த பவித்ராவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் உள்ளது மேற்படி இறப்பு குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment