விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக ஏழு பறவைகள் கபடி குழு சார்பில் கபடி போட்டி.
கே வி குப்பம், அக்28-
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்க வருடாந்தோறும் நடைபெறும் கபடி போட்டி
காமாட்சி அம்மன் பேட்டை ஏழு பறவைகள் கபடி குழு சார்பில் பகல் இரவு ஆட்டம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 42 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து விளையாடி வருவார்கள் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 15,000 மற்றும் ஐந்தடி கோப்பை இரண்டாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் நான்கடி கோப்பை மூன்றாம் பரிசு ரூபாய் 7000 3 அடி கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியின் நடுவர்களாக பாஸ்கர் சுந்தர் மோகன் ராஜேஷ் மற்றும் பலர் பணியாற்றினார். விளையாட்டு வீரர்களுக்கு மதிய உணவு ஏழு பறவைகள் கபாடி குழுவினர் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபேந்திரன்
No comments:
Post a Comment