முதுகலை ஆசிரியரை மீண்டும் பணியில் சேர ஆணையிட்ட ஆட்சியருக்கு ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் நன்றி ! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 October 2024

முதுகலை ஆசிரியரை மீண்டும் பணியில் சேர ஆணையிட்ட ஆட்சியருக்கு ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் நன்றி !

அனைத்துவகை ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு நன்றி

வேலூர் ,அக்28-

வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியை மீண்டும் பணியில் சேர ஆணையிட்ட வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி அவர்களின் நடவடிக்கைகளுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர் மேல்நிலைக்கல்வி மற்றும் கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த வரவேற்பும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ், ஆ.ஜோசப் அன்னையா ஆகியோர் தலைமை தாங்கினர். 
முன்னதாக இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜி.டி.பாபு, எஸ்.எஸ்.சிவவடிவு, எம்.எஸ்.செல்வகுமார், கே.ஜெகதீசன், அக்ரி இ.ராமன், ஜி.சீனிவாசன், ஏ.வி.கவியரசன், கே.சங்கர், ஜி.கோபி, ஜெயகாந்தன், வாரா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் மற்றும் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். 
பின்னர் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஆர்.சுப்புலட்சுமி அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்களின் உறுதிமொழியினை ஏற்று உடனடியாக போராட்டத்தினை விலக்கி கொண்டனர்.   மேலும் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் மீண்டும் காங்கேயநல்லூர் மகளிர் பள்ளியில் பணியில் சேர ஆணைகள் வழங்கிய வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர் மேல்நிலைக்கல்வி மற்றும் கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. மாவட்டத்தின் கல்வித்தரம் உயரவும் மாணவர்கள் கல்வி மேம்படவும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை நல்குவது என தீர்மானிக்கப்பட்டது.

3. மருத்துவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றியதை போலவே ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற தமிழக அரசை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் நிதிக்காப்பாளர் ஜி.கோபி நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு.பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad