அதிமுக சார்பில் மின்சார கட்டணம் வீட்டு வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
குடியாத்தம், அக் 8-
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திமுகவின் சார்பில் தொடர்ந்து மின்சார கட்டணம் குடிநீர் கட்டணம் சொத்து வரி வீட்டு வரி தொழில் வரி கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வேதனைக்கு சோதனைக்கும் ஆளாக்கி வேடிக்கை பார்க்கின்ற விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நகராட்சி முன் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார்
மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் டி சிவா எஸ் எல் எஸ் வனராஜ் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஒன்றிய கழகத் துணைத் தலைவர் கே கே வி வி அருள் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முன்னாள் வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் வி ராமு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி ஆகியோர் விடியா திமுக அரசை கண்டித்து சிறப்புரையாற்றி கண்டன கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் மாணவர் அணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார் கண்டன உரை கோஷங்களை ஆற்றினர் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஆர் கே அன்பு ரவிச்சந்திரன் எஸ் என் சுந்தரேசன் எம் கே சலீம் அட்சய வினோத்குமார் ஆர்கே மகாலிங்கம் ஜி தேவராஜ் சேவல் நித்தியானந்தம் எஸ்டி மோகன்ராஜ் மெடிக்கல் சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் ரேவதி மோகன் தண்டபாணி சிட்டிபாபு மற்றும் நகர மாவட்ட ஒன்றிய வாழ்க அலுவலக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தனஞ்செயன் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment