விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
குடியாத்தம் ,அக் 23-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்வு நாள் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமை தாங்கினார்
வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் முன்னிலை வகித்தார்
கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நெடுமாறன் வரவேற்றார்
இக்கூட்டத்தில் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் குமார்
வனத்துறை அலுவலர் வினோபா ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட 13 துறை அலுவலா்கள் பங்கேற்றனர்
குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அதிக அளவில் இடையூறுகள் ஏற்படுவதால் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும்
சித்தூர் கேட் முதல் தினசரி மார்க்கெட் வரை சாலையில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாத நிலையில் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் விவசாயிகள் காய்கறிகளை எடுத்து வரும்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் எனவே பள்ளங்களை சரி செய்ய வேண்டும்
குடியாத்தம் முதல் வெள்ளேரி வரை அரசு போக்குவரத்து கழகம் வழித்தடம் 10 தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை மீண்டும் இயக்க வேண்டும்
குடியாத்தம் பகுதியில் மாம்பழம் ஜூஸ் பேக்டரி அரசு ஏற்படுத்த வேண்டும்
உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் சம்பத்து நாயுடு சேகர் துரை செல்வம் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment