வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்த எம் எல் ஏ
அணைக்கட்டு,அக்28-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடி பகுதி அரியூர் திருமலைக்கோடி நாராயணி திருமண மண்டபத்தில் வேலூர் வட்ட அளவிலான 2024-25 ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்
இதில் திருமலைக்கோடி நாராயணி மருத்துவ மனை இயக்குனர் பாலாஜி பகுதி செயலாளர் R.K.ஐயப்பன் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் மண்டல குழு தலைவர் S.வெங்கடேசன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment