குடியாத்தம் ,அக்26-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த உத்திரன் என்பவரின் மகன் உதயகுமார் இவர் பேர்ணாம்பட்டு அடுத்த பாஸ்மாா் பெண்டா மலை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியராக பணி செய்து வருகிறார்
தற்போது இவர் பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். 8 ம் வகுப்பு 9 வகுப்பு மாணவிகளிடம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கேலியும் கிண்டல் செய்து, சீருடைகளைப் பிடித்து சிலுமிஷம் செய்து வந்துள்ளார்.
நேற்று மீண்டும் 9- வகுப்பு படிக்கும் 3 மாணவிகளிடம் சிலுமிஷம் செய்துள்ளார். இதனால், மாணவிகள் அதிர்ச்சி அடைந்து அழுதவனவாரே தங்கள் வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளனர்
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் வடிவேலு ஆகியோர் நேற்றிரவு பாஸ்மார் பெண்டா மலை கிராமத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேர்ணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை மேற்கொண்டு குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், நேற்று இரவு 2 மணி அளவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராணி தலைமையில் போலீசார் அக்ராவரம் கிராமத்திற்குச் சென்று ஆசிரியர் உதயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
No comments:
Post a Comment