இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்த ராணுவ வீரர் சாலை தடுப்பு சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே பலி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 October 2024

இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்த ராணுவ வீரர் சாலை தடுப்பு சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே பலி!

காட்பாடி ,அக் 26-

ராணுவ வீரர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை பெரிய தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ராஜாராம் (வயது 26) கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் பணியில் சேர்ந்து தற்போது டேராடூன் பகுதியில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் வள்ளிமலை பகுதியில் இருந்து வேலூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் உள்ள சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்பாடி தாலுக்கா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad