தீயணைப்புத் துறையினர் கல்குவாரியில் விழிப்புணர் பிரச்சாரம்
குடியாத்தம் ,அக 8-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஒத்திகை பயிற்சி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கல்லேரி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் நடைபெற்றது
அப்பொழுது வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை சீற்றம் நீர்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் பொது மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி கலந்து கொண்டு பருவமழை காலங்கள் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரச்சுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment