குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
குடியாத்தம்,அக் 26-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தின் சார்பில் புவனேஸ்வரி பேட்டை லிட்டல் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
கண்காட்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர். தமிழ்ச்செல்வன் குமரன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் தொழிலதிபர் குமரகுரு மற்றும் நகர மன்ற உறுப்பினர் சுமதி மகாலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளையும் ஆக்கங்களையும் பார்வையிட்டு சிறப்புரை ஆற்றினர்.
பள்ளி செயலர் ரம்யா கண்ணன் அவர்கள் தலைமையில் பள்ளி தாளாளர் வி.சடகோபன் M.A.MPhil., அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் நூறாவது ஆண்டு சிறப்பினை எடுத்துக் கூறி அறிவியல் கண்காட்சி சிறப்புரை ஆற்றினார்.
அறிவியல் கண்காட்சியில் உலகிலேயே முதல் குடியுரிமை பெற்ற சோபியா எனும் ரோபோ , வள்ளுவர் கோட்டம், தஞ்சை பெரிய கோவில், சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆதி கால மனிதன் குகை , அறிவியல் துறையின் ஏவுகணை , பாரம்பரிய உணவு வகைகள் தொழில் வளர்ச்சியின் முன்னேற்றங்கள், விவசாயத்தின் அவசியம் குறித்த மாணவர்களின் படைப்புகள் சிறப்பு அழைப்பாளர்களையும் பெற்றோர்களையும் வெகுவாக கவர்ந்தன. அறிவியல் கண்காட்சியில் பள்ளி முதல்வர் ஆர் மேகலா அவர்கள் வரவேற்புரை நல்க பள்ளியின் துணை முதல்வர் ஆர் ராஜகுமாரி அவர்கள் நெறியா செய்தார். இறுதியாக அறிவியல் மன்ற செயலாளர் ஆசிரியர் வி.விந்தோஷ்குமார் நன்றியுரை வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment