உலக ரெட் கிராஸ் நிறுவனர் இயக்கத்தின் தந்தை ஜீன் ஹென்றி டுனான்ட அவர்களின் 115 ஆவது நினைவு தினம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 November 2024

உலக ரெட் கிராஸ் நிறுவனர் இயக்கத்தின் தந்தை ஜீன் ஹென்றி டுனான்ட அவர்களின் 115 ஆவது நினைவு தினம்!

உலக ரெட்கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனான்ட் 115வது நினைவு தினம்

காட்பாடி ,நவ1-

வேலூர் மாவட்டம் காட்பாடி
ரெட்கிராஸ் இயக்கத்தின் தந்தை ஜீன் ஹென்றி டூனானட் அவர்களின் 115வது நினைவு நாள் முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மேலாண்மைக் குழு கூட்டத்தில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு காட்பாடி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு அவைத்தலைவர் செ.நா.
ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்று பேசினார்.  அவை துணைத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, பொருளாளர் வி.பழனி அகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், என்.தங்கவேல், ஆர்.ராதாகிருஷ்ணன், பி.என்.
ராமச்சந்திரன், எ.ஶ்ரீதரன் ஜெயின், டி.லிவிங்ஸ்டன் மோசஸ், டாக்டர் வி.தீனபந்து, ஜி.செல்வம், டி.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்று அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இக்கூட்டத்தில் பேசிய அவைத்தலைவர் செ.நா.
ஜனார்த்தனன்  கூறியதாவத..  ஜீன் ஹென்றி டூனான்ட் (Jean Henri Dunant), அக்டோபர் 30, 1910ல் மறைந்தார்.  இவர் தான் ரெட்கிராஸ் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸர்லாந்து நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்த வர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை பிரடெரிக் பாசியுடன் பகிர்ந்து பெற்றார். இந்நாளில் அவரின் கனவை நனவாக்க காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சார்பில் அவரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் சார்பில் இரத்த தான வங்கி தொடங்க உரிய முயற்சிகளை மேற்கொள்வது இதற்கென மாநில அமைப்பின் வழிகாட்டுதல் பெறுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் மாதம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்துவது என்றும் இக் கூட்டத்தில் சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டி, ஆண்டு மலர் வெளியிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய உறுப்பினர்கள் மற்றும் பழைய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மேலாண்மைக்குழு உறுப்பினர் என்.தங்கவேல் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad