20 கிலோ குட்கா, சுமோ பறிமுதல் ஒருவர் கைது
குடியாத்தம், நவ. 18-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உட்பட போலீசார் உள்ளி மாதனூர் சாலையில் காக்கா தோப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது சுமோ ஒட்டி வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் சுமோ உள் பகுதியில் சோதனை செய்தபோது பின்பகுதியில் உள்ள சீட்டின் அடியில் 3 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மூட்டைகளை பிரித்துப் பார்த்தார். அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பாக்கு பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர் தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் மஞ்சு நாதன் (வயது 40) என்பதும், இவர் நடத்தி வரும் மளிகை கடையில் விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 3 மூட்டைகளில் இருந்த 20 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள், சுமோ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மஞ்சு நாதை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை பகுதியில் தாலுகா போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் 20 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட மஞ்சு நாதன் அவருடைய நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment