குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது தொடர்பாக
வேலூர் ,நவ 18-
வேலூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் எதிரிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்பு லெட்சுமி இ.ஆ.ப., அவர்கள், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையை பிறப்பித்து வரும் நிலையில், மேல் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மணல் திருட்டு வழக்கில் கைதாகி, நீதிமன்ற காவலில் இருந்துவரும் எதிரி, வெங்கடேசன், 2/45, த/பெ.கோவிந்தன், கீழ் பட்டி, குடியாத்தம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணையை பிறப்பித்துள்ளார். மேற்படி ஆணையை, பேர்ணாம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் அவர்கள், 18.11.2024-ம் தேதி வேலூர் மத்திய சிறைச்சாலையில்
சமர்பித்தார். மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment