அரசு மருத்துவமனையில் துர்நாற்றம் வீசிய உடல் அடக்கம் செய்த சமூக சேவகர் ரோட்டரி சங்கம் எம்.கோபிநாத்
குடியாத்தம் , நவ 17-
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள கீழ் ஆலத்தூர் கிராமத்தில், அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர், நவம்பர் 12 -ஆம் தேதியன்று உடல்நிலை குன்றிய நிலையில் இருந்தார். .
அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குடியாத்தம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அன்று இரவே இயற்கை எய்தினார். கே.வி.குப்பம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடல த்துக்கு யாரும் உரிமை கோரி வராததால், பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அரசு மருத்துவமனையில் கூடுதலாக கட்டடம் கட்டப் படுவதால், தற்போது பிணவறையில் ஏ.சி.வசதி சரிவர இல்லை. இதனால் இறந்த முதியவரின் உடலில் இருந்து நவம்பர் 16-அன்று துர்நாற்றம் வீசவே, நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது.
வேலூர் மாவட்ட கலெக்டர் வி.ஆர்.சுப்பு லட்சுமியும் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மாறன் பாபு அவர்களின் வேண்டு கோளின் பேரில், கண் தான ஆர்வலரும் ஜி ஜி ஜி ரோட்டரி சங்க சாசன தலைவரும் உயிர் அறக்கட்டளை தலைவருமான எம்.கோபிநாத் மருத்துவமனைக்கு சென்று சடலத்தை பெற்றார். பின்னர் அவர் தனது சொந்த செலவில் சுண்ணாம்பு பேட்டை மயானத்தில் உடல் அடக்கம் செய்தார். கே வி குப்பம் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் திரு பாபு அவர்கள் கோபிநாத் அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கி உதவி புரிந்தார். 2015 ஆண்டு முதல் இதுவரை கோபிநாத்தின் முயற்சியில், ஆதரவற்றோரின் 356 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ... 852 பேரின் கண்கள் தானமாகவும், ... 347 பேரின் உடல் தானமாகவும், மூன்று பேரின் உடல் உறுப்புகள் தானமாகவும் பெற்று தரப்பட்டுள்ளன.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment