குடியாத்தம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நிற்க நடவடிக்கை தேவை
குடியாத்தம் ,நவ 12-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 25 ஆண்டுகளாக குடியாத்தம் ரயில் நிலையத்தில் லால் பாக், கோவை, பிருந்தாவன், திருவனந்தபுரம் போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல பலமுறை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்,அரசியல் வாதிகளுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, மேற்கண்ட நான்கு ரயில்களை சுமார் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள காட்பாடி அல்லது ஆம்பூர் ரயில் நிலையங்களுக்கு சென்று பயன்படுத்தி வருகின்றனர் தற்போது உள்ள குடியாத்தம் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய ரயில்கள் குடியாத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை, வேலூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் வாக்காளர்களை கொண்ட மிகப் பெரிய தொகுதி மற்றும் தாலுக்கா காகவும் குடியாத்தம் உள்ளது அதுமட்டுமின்றி பேரணாம்பட்டு , மேல் பட்டி, வளத்தூர், K.V.குப்பம், பரதராமி, பள்ளிகொண்டா, மாதனூர் உள்ளிட்ட குடியாத்ததை சுற்றி உள்ள பல கிராம மக்கள் ரயில் போக்குவரத்திற்காக குடியாத்தம் ரயில் நிலையத்தை மட்டுமே நம்பி உள்ளனர் எனவே மேற்கண்ட ரயில்களை குடியாத்தம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டி பலமுறை பல ஆட்சியாளர்களிடம் MP, MLA உட்பட அனைவரிடமும் 25 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ஆனால் நமது கோரிக்கை இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை, (Whatsup no: 8754376662 email: mp office @kathiranandh.in
அலுவலக எண்: 04162223699) எனவே மேற்கண்ட வாட்சப் நம்பர் மற்றும் மேற்கண்ட ஈமெயில் முகவரிக்கு இந்த கடிதத்தினை அனுப்பி வைத்து குடியாத்தம் தொகுதி மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் தொழிலுக்கும் உடல்நலம் சார்ந்த மருத்துவமனை தொடர்பான போக்குவரத்து களுக்கும் மேற்கண்ட நான்கு ரயில்கள் குடியாத்தம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டி நமது நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த அவர்களுக்கு இக்கோரிக்கை மனுவினை அனுப்பி வைத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment