குடியாத்தம் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு கொடுத்தவர்களுக்கு நல திட்டம் வழங்கும் விழா
குடியாத்தம், நவ 12-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பல்வேறு கோரிக்கைகளை மனு அளித்தனர்
மனுக்களை பரிசீலனை செய்து தகுதி வாய்ந்த பயனாளிகள் சுமார் 555
நபர்களுக்கு 3 கோடி மதிப்பீட்டில் நல திட்டங்கள் வழங்கப் பட்டனர்
இந்நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் சுப லட்சுமி தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜி யன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு நல திட்டங்களை வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் உத்தர குமாரி பேர்ணாம்பட்டு
நகர மன்ற தலைவர் சித்ரா ஜனார்த்தனன் பேர்ணாம்பட்டு
வட்டாட்சியர் வடிவேலு மின்சாரத்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
இறுதியில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கலைவாணி நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment