மின்சார வாகனம் பயன்பாட்டை குறித்து விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்
குடியாத்தம் ,நவ 12-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் மூலம் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பயன்பாட்டை குறித்து விழிப்புணர் பிரச்சாரம் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு செயற் பொறியாளர்
வெங்கடாஜலபதி தலைமை
தாங்கினார் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
இதில் நகர மன்ற தலைவர் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
உதவி செயற் பொறியாளர்
சீனிவாசன் வரவேற்றார். இதில் உதவி செயற் பொறியாளர்கள்
பெருமாள் கலை செழியன் உதவி பொறியாளர்கள் உமா பிரியா நவீன் குமார் பாலகிருஷ்ணன் மற்றும் மின் பணியாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரிய துறை அலுவலர் துவங்கி முக்கிய வீதிகளில் ஊர்வலம் வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment