வேலூர் மாவட்டம் அளவில்லான சாலையோர மிதிவண்டி போட்டி.
குடியாத்தம் ,நவ 25-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேத்து வண்டை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பள்ளி கல்வி துறையின் சார்பாக சாலையோர மிதிவண்டி போட்டி இன்று காலை நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3 பிரிவின் கீழ் 14 ,17, 19 வயதுதின் நடதபட்டது.
இவ்விழாவிற்கு போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இன் நிகழ்ச்சியில் சொர்ணம் ஏஜென்சி உரிமையாளர் பொன்னம்பலம் வழக்கறிஞர் சந்தில் உரிமையாளர் ரங்கா டிஜிட்டல் குமரவேல் மற்றும் நகர உதவி ஆய்வாளர்கள் அன்பழகன் ராஜேஸ்வரி தரணி பரிவர்த்தம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்
இப்போ போட்டியில் ஆறு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திருநெல்வேலியில் நடக்கவுள்ள மாநில அளவிலான சாலை ஓரம் மிதிவண்டி போட்டிக்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்
14 வயது பிரிவு 1 st ஞானசேகரன் அரசு உயர்நிலைப்பள்ளி திருவலம்
2வது எம் ரேணுகா அரசு உயர்நிலைப்பள்ளி கரிகரி
17 வயது பிரிவு 1 st எம்பிரநாத் வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளி
2-வது பி காவியா ஈவேரா பெண்கள் பள்ளி 19-வயது பிரிவு
1st ஏ சச்சின் ராஜ் அரசு உயர்நிலைப் பள்ளி திருவலம் 2-வது
வி லோகேஸ்வரி அரசு மேல்நிலைப்பள்ளி ஆர் எஸ் குடியாத்தம் மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment