ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்புடன் இணைந்து டிசம்பர்-3ல் தர்ணா போராட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 November 2024

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்புடன் இணைந்து டிசம்பர்-3ல் தர்ணா போராட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்புடன் இணைந்து டிசம்பர் 3ல் தர்ணா போராட்டம்

வேலூர் ,நவ 10 -

வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து டிசம்பர்3ல் தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. 
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர் நலச் 
சங்கத்தின்  மாநில செயற்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஓய்வூதியர் சங்க கங்களின் கூட்டமைப்பின் சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் திரளாக பங்கேற் முடிவெடுத்துள்ளனர்.
மாநிலத் தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில பொதுச் செயலாளர் ந.பர்வதராஜன் வரவேற்று 
மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா. ஜனார்த்தனன், மாநில துணைத்தலைவர் நிலவு குப்புசாமி,  மாவட்ட செயலாளர் ஏ அப்துல் ரஹீம் நாகராஜன் உள்பட 30 மாவட்டங்களைச் சார்ந்த செயலாளர்கள் மாநில செயலாளர்கள் பேசினர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது 
1.காப்பீட்டுதிட்டத்தில் உள்ள குளறுபடிகளை களையவும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறக் கூடிய வகையில் புதிய காப்பீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் இத்திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட கோரியும் தீர்மானிக்கப்பட்டது.
2.தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 80 வயது துவக்கத்திலேயே ஓய்வூதியத் தொகையினை இருபது சதவிகிதம் உயர்த்தி வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 
3. தமிழ்நாடுஅரசு ஓய்வு ஊதி யோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் டிசம்பர் 3ஆம் தேதி 5அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி நடைபெறும் தர்ணா போராட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளிக்கல்வி ஆசிரியர் நல சங்க உறுப்பினர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற கோருவது என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் மாநில பொருளாளர் ப.கிருஷ்ணன் நன்றி கூறினார்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad