பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 5.100 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல்
குடியாத்தம், நவ 10-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று 10.11.2024-ம் தேதி, குடியாத்தம் உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன், கீ.வ.குப்பம் வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் மற்றும் பரதராமி காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோரின் தலைமையிலான போலீசார், பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரஸ்வதி நகர் பகுதியில், முரளி என்பவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை மேற்கொண்டதில்,அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 5.100 கிலோ கிராம் எடை கொண்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முரளி வ/40, த/பெ.முனிரத்தினம், சரஸ்வதி நகர், பரதராமி. என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment