தொடர் கன மழை காரணமாக வீடு இடிந்த முதியவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 December 2024

தொடர் கன மழை காரணமாக வீடு இடிந்த முதியவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்!

குடியாத்தம் தொடர் கன மழை காரணமாக வீடு இடிந்த முதியவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்

குடியாத்தம் , டிச 3 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்
 33 ஆவது வார்டு பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் திரு. சுப்பிரமணி- ராணி தம்பதியினரின் பழைய மண் சுவர் வீடு நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது. இதை அடுத்து குடியாத்தம் நகர அதிமுக சார்பில் நகர கழகச் செயலாளர் ஜே.கே. என்.பழனி பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன்,அரிசி மற்றும் பாய், தலையணை, காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். உடன் மாவட்ட பிரதிநிதி SN.சுந்தரேசன், நகர மன்ற உறுப்பினர்கள் M.ரேவதி மோகன், A சிட்டிபாபு, எஸ்.கே சுரேஷ்Ex.MC, வார்டு கழகச் செயலாளர்கள் கே. மூர்த்தி,T S. கார்த்தி, எம்ஜிஆர் மன்றம்  சி.மனோகரன், மகளிர் அணி கலாவதி, டைலர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்தி உள்ளிட்ட பலர் இருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad