குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் நிலை தடுமாறி பனை மரத்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு
குடியாத்தம் ,நவ 1-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தன கொண்ட பல்லி மதுரா சைன குண்டா கிராமத்தில் வசிக்கும் வேணு (எ) ராஜேஷ் த/ பெ பிரதாப் (வயது 42) என்பவர் இரு சக்கர வாகனத்தில் 31-10-2024 இரவு சுமார் 8:00 மணி அளவில் குடியாத்தம் பகுதியில் இருந்து சைன குண்டா வீட்டிற்கு செல்லும் போது பலமநேரி சாலையின் அருகே உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி மேற்படி நபர் சம்பவ இடத்திலே இறந்து விட்டார் . வேணும் என்று நபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த விபத்து தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment