காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப் புரை வாசித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 November 2024

காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப் புரை வாசித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

குடியாத்தம் , நவ 26-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தின் 75 ஆவது நிறைவை முன்னிட்டு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை (PREAMBLE) வாசித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும், சட்ட சிற்பி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும் இன்று (26.11.2024) செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.
நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் G.சுரேஷ்குமார் தலைமை  தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், தேவகி ராணி ராஜேந்திரன், பாஸ்கரன், சரவணன், பாரத் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
 குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் வரவேற்புரை ஆற்றினார்  நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன்ராஜ் இந்திய அரசியலமைப்பு தினம் குறித்தும், இந்திய விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் பங்கு குறித்தும் சிறப்புரை ஆற்றினார் நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர்  கிருபானந்தம் விஜய் பாபு,  வட்டார தலைவர்கள் சங்கர், ஜோதி கணேசன், பேரூர் தலைவர் அக்பர் பாஷா, மாநில சிறுபான்மையினர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் MD.ராகிப், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், R G P R S மாவட்ட தலைவர் ஆனந்த வேல், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் ஆடிட்டர் ஹரி பாபு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி. கோமதி குமரேசன், மாவட்ட OBC பிரிவு தலைவர் ஜலேந்திரன், வட்டார , நகர நிர்வாகிகள் ஸ்டாலின், தமிழரசன், மணிவேல், கதிர்வேல், உமாபதி, ராகேஷ், பேங்க் மனோகரன், இலியாஸ் பாஷா, பொன்னரசன், ரங்கநாதன், சிகாமணி, வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொன்டனார் முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad