வேலூர், நவ 26 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று 26.11.2024 காலை 10
மணியளவில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்றார்.
இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பி.ஞானசேகரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பா.ரவி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை
யாற்றினார். ஓய்வு பெற்றோர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் பி.லோகநாதன், நகர தொழிற்சங்க கன்வீனர் சி.ஞானசேகரன், எ.கதீர்அகமது, எ.தாமோதரன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட இணை செயலாளர் கி.ஆண்டாள் நன்றி கூறினார்.
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்த வேண்டும், கம்யுடேசன் தொகை பிடித்தம் 10 ஆண்டுகளாக மாற்றம் செய்ய வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850/- வழங்க வேண்டும், 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காப்பீட்டு திட்டத்தில் உள்ள நீண்ட கால குறைபாடுகளை களைய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment