அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
குடியாத்தம் ,நவ 14-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர கழகத்தின் சார்பில் குடியாத்தம் செதுக்கரை அரசு பேருந்து டிப்போ எதிரில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு நகர கழக அவை தலைவர் ஆர்.கே.அன்பு தலைமை தாங்கினார். குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே.கே.என்.பழனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக நிர்வாகிகள் சேட்டு, கஸ்பா மூர்த்தி, அமுதா சிவபிரகாசம், சந்திரா சேட்டு, காடை மூர்த்தி, ஒன்றிய நகர கழக செயலாளர்கள் வனராஜ், பிரபாகரன், சீனிவாசன், பாபுஜி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் டில்லி பாபு, எஸ்.எஸ்.ரமேஷ் குமார், தென்றல் குட்டி, சேட்டு, சிவப்பிரகாசம், பொறிக் கடை பாலாஜி, கோல்டு குமரன் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு கே.சி.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன், முன்னாள் வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கழக அமைப்புச் செயலாளர் ராமு ஆகியோர் கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட சார்பணி செயலாளர்கள் அன்வர் பாஷா, இமகிரி பாபு, மாலிபட்டு பாபு, ஹேமந்த் குமார், பாடகர் குமார், சரவணன், வழக்கறிஞர் கோவிந்தசாமி, கண்ணன், ரித்தீஷ், அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், நகர கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அமுதா கருணா, சுந்தரேசன், சலீம், அட்சயா வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் ரேவதி மோகன், தண்டபாணி, சிட்டிபாபு உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக நகர கழக பொருளாளர் தனஞ்செயன் நன்றியுரை கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment