புதிய கூடுதல் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
அணைக்கட்டு, நவ12-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லா புரம் பகுதி 55 ஆவது வார்டு பகுதியில்
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய கூடுதல் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு பகுதி செயலாளர் C.M.தங்கதுரை மண்டல குழு தலைவர் 54ஆவது வார்டு கவுன்சிலர் P.சுதாகர் மாமன்ற உறுப்பினர் ஜெய் வட்ட செயலாளர்கள் ரமேஷ் தேவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment