வலுவிழந்த பழைய கட்டிடம் ஆரம்ப சுகாதார நிலையம் உயிர் சேதம் ஏற்படாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 November 2024

வலுவிழந்த பழைய கட்டிடம் ஆரம்ப சுகாதார நிலையம் உயிர் சேதம் ஏற்படாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க!

உயிர் சேதம் நடந்தால் மட்டுமே பழைய சேதமடைந்த கட்டிடத்தை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

காட்பாடி, நவ 12-

 வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு அடுத்த  கிளுத்தான் பட்டறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது உள்ளே ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு அதன் வழியாக மழை நீர் உள்ளே வருகிறது அதன் அருகில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு ஒரு வருடம் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எப்போது இடிந்து விழும் என்று தெரியவில்லை சில தினங்களுக்கு  முன்புதான் தாராபடவேடு நகரத்தில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் இறந்துள்ளார் மேலும் இதேபோல் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க தயவு செய்து அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை மனு  

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad