குடியாத்தம் சிறந்த பள்ளிக்கான விருது
குடியாத்தம் ,நவ 16-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது
சென்னையில் நடந்த சிறந்த பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விருது வழங்கும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் திருக் கரங்களால் குடியாத்தம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கள்ளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார் இன்று கள்ளூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி என்று பெருமிதம் என்று தலைமையாசிரியர் தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment