குடியாத்தம் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
குடியாத்தம்,நவ 16-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்கினார்
வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்
தலைமை இடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார்
இதில் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்
கால்நடை சந்தை அமைக்க இடம் தேர்வு செய்து தர வேண்டும்
குடியாத்தம் முதல் மாதனூர் வரை பேருந்து வசதி ஏற்ப்படுத்தி தர வேண்டும்
செருவங்கி ஏரி கால்வாயை தூர் எடுத்து தர வேண்டும்
குடியாத்தம் முதல் அகரம் சேரி வரை பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் மங்கை யர்கரசன் தோட்டக்கலை அலுவலர் தமிழரசி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சம்பத் நாயுடு சேகர் பழனியப்பன் மற்றும் 13 துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment