வேலூர்,நவ 14-
வேலூர் மாவட்டம் ரங்கா புரம் அடுத்த பெருமுகை அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் வடிவத்தில் முகமூடி அணிந்து வந்த பண்டிட் நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று பெருமுகை அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா தனது இளம் குடிமக்களை கௌரவிபதற்கும், மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றது.இந்த ஆண்டு பெரு முகையில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வேலூர் கிளை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.இராமன் தலைமையேற்று நேரு அவர்களின் குழந்தைகள் பற்றிய தனது தொலைநோக்கு பார்வைகள் குறித்து பேசினார்.அன்பு, இரக்கம் மற்றும் அறிவியல் பார்வை மற்றிம. வழிகாட்டுதலுடன் கூடிய கல்வி, ஆகியன குழந்தைகளுக்கும், வருங்கால சந்த்திகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு ஒத்ததாக இருக்கும் என்று நேரு நம்பினார் என்றும், இன்றைய இளைஞர்களிடம் முதலீடு செய்வதன் மூலம், இந்தியா ஒரு வளமான, சமத்துவ வளர்ச்சியை உள்ளடக்கிய மற்றும் புதுமையான நாளை முதலீடு செய்கிறது என்ற நேரு அவர்களின் சிந்தனைகளை, தலைமை ஆசிரியர் இராமன் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். உதவி தலைமை ஆசிரியர் ஆர்.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வித்தனர்.வரவேற்பு உரையாற்றிய உதவி தலைமை ஆசிரியர் பி. பிரகாஷ் பாடல் இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். ஆசிரியர் சதீஷ்குமார் பலகுரலில் பேசி மாணவர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்கள் ஆசிரியர் பி.பழனிச்சாமி அவர்கள் கவிதை வாசித்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் கிளை செயலாளர் முத்து சிலுப்பன் அவர்கள் பள்ளியின் நூலகத்திற்கு ரூபாய் 2500 மதிப்புள்ள புத்தகங்களை தானமாக வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
குழந்தைகள் ஒரு தோட்டத்தில் மொட்டுகளைப் போன்றவர்கள், அவர்கள் தேசத்தின் எதிர்காலம் மற்றும் நாளைய குடிமக்கள் என்பதால் கவனமாகவும் அன்பாகவும் வளர்க்கப்பட வேண்டும்' என்ற பண்டிட் நேரு அவர்களின் தொலைநோக்கு பார்வையை நினைவு கூர்ந்து பேசியதோடு, துளிர் திறனறி தேர்வு , துளிர் வினாடி வினா இளம் விஞ்ஞானிகளுக்கான குழந்தைகள் அறிவியல் ஆய்வுகள் செய்வது குறித்தும் அறிவியல் இயக்க செயலாளர் முத்து.சிலுப்பன் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினார்.
குழந்தைகள் தின விழாவில்
அறிவியல் ஆசிரியர் கே.குலோத்துங்கன் அவர்கள் தலைமையில் மாணவர்கள் ஒன்றிணைந்து நூலக புத்தகங்களை பெற்றுக்கொண்டார்கள்.பள்ளி குழந்தைகள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். விழா நிறைவாக ஆசிரியர் இராசா அவர்கள் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment