சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கல்!
வேலூர் ,நவ.17-
வேலூர் மாவட்டம் சேன் பாக்கம் முள்ளிப்பாளையம் வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் அவினாஷ் (வயது 30). ஆனந்தன் ஏற்கனவே இறந்துவிட்டார் இவருக்கு அனு (வயது 29) என்று ஒரு தங்கை உள்ளார் .இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது மோட்டார் பைக்கில் வேலூரில் இருந்து வாணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தார் அவினாஷ். அப்போது வாணியம்பாடியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நடந்த சாலை விபத்தில் அவினாஷ் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்தவரை சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பெங்களூரில் இருந்து வேலூருக்கு கொண்டுவரப்பட்ட அவினாஷ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் கடந்த 16ஆம் தேதி அவினாஷூக்கு மூளைச்சாவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பெற்றோர்களின் முழு அனுமதியுடன் அவரது உடல் பாகங்களான கண்கள், சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்டவைகள் தானமாக பெறப்பட்டு சென்னை, வேலூர் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. இதில் அவரது உடல் பாகங்கள் சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் எம் ஜி எம் மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வேலூர் நாராயணி மருத்துவமனைக்கும் அவரது உடல் பாகங்கள் பயன்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment