வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்
குடியாத்தம் ,நவ 16-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் செம்பேடு ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் அவர்களின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப் பேரில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் யுவராணி சத்தியம் மூர்த்தி
ஒன்றிய குழு உறுப்பினர் செல்வி தேவராஜ் ஊராட்சி மன்ற துணை தலைவர் பிசி வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பி. பரணிதரன் முன்னிலை வகித்தார்
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஒன்றிய குழு பெருந்தலைவர் எண்ணி
சத்யானந்தம் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்தனம் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர் சிறப்பு அழைப்பாளர்கள் ஒன்றிய ஒன்றிய குழு துணைத் தலைவர் கே கே வி அருண் முரளி குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் பி எச் மம்தா இமயகிரி பாபு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் திட்ட குழு உறுப்பினர் டி ஆனந்தி முருகானந்தம்
வட்டார வளர்ச்சி அலுவலர் பா. சரவணன் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ் வினோத்குமார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சி தமிழரசன் கிராம நிர்வாக அலுவலர் சா விஜயகுமார்
ஊராட்சி செயலாளர் டி தீப ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்
இந்த சிறப்பு முகாம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கண் பல் காது மூக்கு தொண்டை வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் காசநோய்
போன்றவைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சைகளுக்கு இலவச ரத்த பரிசோதனை செய்யப்படும் மேற்படி முகாமில் முதலமைச்சரை விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக் கப்பட்டுள்ள மருத்துவமனைகள் சார்ந்த சிறப்பு மருத்துவர் கலந்து கொள்ள உள்ளார்கள் இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment