சுகாதார சீர்கேடு கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 November 2024

சுகாதார சீர்கேடு கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்!

குடியாத்தம் அருகே சுகாதார சீர்கேடு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடியாத்தம் நவ 4-

வேலூர் மாவட்டம் குடியாத்தம்
 சீவூர் ஊராட்சி கல்லூர் கிராமம்  குறிஞ்சி நகர் பாபா நகர் மற்றும் ராயல் பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் உள்ள கழிவு நீர்  வெளியேற்ற இயலாமல் சாலைகளில் தேங்குவது தொடர்பாக  இன்று காலை 11.00 மணி முதல் 11.10 மணி வரை மேற்படி பகுதி சார்ந்த பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊரக வளர்ச்சித் துறை  பொறியாளர் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர்  செயலாளர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில்  பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக விசாரணை செய்ததில் மேற்படி பகுதிகளில் கழிவு நீர்  கால்வாயில் உள்ள கழிவு நீர் வெளியேற்றுவதில் உள்ள  சிக்கல் தொடர்பாக நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் இந்த மறியலில் 20 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் கலந்து கொண்டனர்.  பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது பேச்சுவார்த்தைக்கு பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad