குடியாத்தம் அருகே முன் விரோதம் காரணமாக வாலிபர் மீது தாக்குதல்
போஸ்ட் மாஸ்டர் உள்பட 4 பேர் கைது
குடியாத்தம் நவ 4-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பரத் குமார் (வயது 24) இவரது உறவினர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த
ஜோலார்பேட்டையில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வரும் சுதீர் குமார் (வயது 27) என்பவருக்கு இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் தன்னை பார்க்க வந்த நண்பர்களான வாணியம்பாடி திம்மாம் பேட்டையை சேர்ந்த சரண் (வயது 20) கல்லூரி மாணவன் வினித் மற்றும் ஒருவர் ஆகியோரிடம் பரத் என்பவர் ஊரில் அடிக்கடி பிரச்சினை செய்து வருவதாக கூறினார் .இதனால் சரண் வினீத் ஆகியோர் பரத்தை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த பரத் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக அவர் மேல்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்
அதில் போஸ்ட் மாஸ்டர் சுதீா் குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோர் வரத்தை தாக்குவதற்கு பணம் கொடுப்பதாக கூறியதால் பரத்தை தாக்கியதாக தெரிவித்தனர் இதை யடுத்து போஸ்ட் மாஸ்டர் சுதீர் குமார் சரண் வினீத் மற்றும் (17 வயது)கல்லூரி மாணவர் ஆகிய 4 போ்ரை கைது செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment