திருச்சி மாவட்டத்தில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது தாக்கப்பட்ட செவிலியருக்கு பாதுகாப்பு வழங்கிட கோரி வேலூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
வேலூர் நவ,04-
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கமும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் செவிலியர் தாக்கப்பட்டதை கண்டித்தும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு கோரியும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பா.தீனதயாளன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் ம.இனியா வரவேற்று பேசினார்.மாவட்ட தலைவர் எம்.சத்யா முன்னிலை வகித்தார் மாநில துணைத்தலைவர்
ச.ஹேமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் பா.வேலு மத்திய செயற்குழு உறுப்பினர் இளம் தமிழன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
முடிவில் கேத்தரின் நன்றி கூறினார்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும் தாக்கப்பட்ட செவிலியருக்கு உரிய சிகிச்சை வழங்கிட கோரியும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு மிகக் கடுமையாக காயம் அடையச் செய்த நபர் மீது உரிய வழக்குகள் பதிவு செய்து தண்டிக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
திருச்சி மாவட்டம் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31/10/24 அன்று மாலை 5 மணிக்கு பணி முடித்து வீடு சென்றுகொண்டிருந்த செவிலியரை இரு சக்கர வாகனத்தில் பின்
தொடர்ந்த நபர் ஒருவர் செவிலியர் பின்னால் இருந்து தாக்கி கீழே தள்ளி விட்டு அவரை கடுமையாக தாக்கி காயங்கள் ஏற்படுத்தி பாலியல் வன்முறையின் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் செவிலியரை காப்பாற்றி லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து பெண்கள் மீது குறிப்பாக செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பணியிடத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாமல் பணி செய்யும் செவிலியர்களுக்கு மிகுந்த அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ஆனால் அங்கு பாதுகாப்புக்காக இரவு காவலர்கள் கூட இல்லை. இரவு நேரங்களில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இரவு முழுவதும் வரும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் தனிமையில் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இரவு நேரங்களில் பெரும்பாண்மையான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் இல்லாமல்
செவிலியர்களை கொண்டே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அத்த நேரங்களில் குடித்து விட்டு வரும் சமுக விரோதிகளால் பல்வேறு தாக்குதல்களுக்கு செவிலியர்கள் உட்படுத்த படுகின்றனர். மருத்துவ சேவை உயிர்காக்கும் சேவை என்பதால் இரவில் எந்த நேரத்தில் நோயாளிகள் வந்தாலும் மருத்துவமனையை திறந்து சிகிச்சை வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வண்முறையில் ஈடுபடுவது வழக்கமாக நடந்து வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியே இருப்பதாலும் அங்கு இரவு காவலர்கள் கூட இல்லாததாலும் செவிலியர்கள் அச்சத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் பணி செய்து வருகின்றனர். மருத்துவ ஊழியர்களை பாதுகாக்க தமிழ்நாட்டில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது நிர்வாகம் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் சுணக்கம் காட்டி வருகிறது. பல நேரங்களில் மருத்துவமனை நிர்வாகம் குற்றவாளிகளுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடித்து விடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
24 மணி நேரம் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை பாதுகாக்கும் விதமாக இரவு காவலர்களை நியமிக்கவும், மருத்துவமனையில் சுற்று சுவர்கள் அமைக்கவும், 24 மணி நேரமும் மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதையும், அதை எந்த நேரமும் கண்காணிக்கப்படும் வசதியை ஏற்படுத்துவதுடன் குற்ற சம்பவங்கள் மேலும் நடக்காத விதத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதையும் தமிழ்நாடு அரசும் மருத்துவ துறையும் உறுதி செய்திட வேண்டும்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment