குடியாத்தம் அடுத்த பாக்கம் சித்தூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குடியாத்தம் ,நவ 8-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் சாலை பாக்கம் கூட்டு ரோடு அருகே சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ் சாலைத் துறையின் மூலம் கூட்டு ரோடு பகுதியில் சாலை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள்
அகற்றும் பணி நடக்க உள்ளதால் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு சில வாரங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனர். இதையடுத்து சிலர் முன்வந்து தங்கள் கடையின் முன் உள்ள தகர ஷீட் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர் ஆனால் பலர் அகற்றாமல் இருந்தனர். இந்நிலையில் கோட்ட பொறியாளர் தனசேகரன் உத்தரவின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் அமுலு அறிவுத்தலின் பேரில் உதவி பொறியாளர் யோகராஜ் சாலை ஆய்வாளர்கள் ரஞ்சித் குமார் வெங்கடேசன் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில நெடுஞ்சாலைத்
துறையினர் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அப்போது மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உடன் இருந்தனர் மேலும் பரதராமி உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment