குடியாத்தம் ,நவ 8-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உலக
சிவனடியா்கள் திருக் கூட்ட யாத்திரை
இன்று வெள்ளிக்கிழமை உலக மக்கள் நன்மைக்காகவும் சைவத்தின் எழுச்சிக் காகவும் வேண்டி வேலூர் மாவட்டம் குடியாத்தம் உலக சிவனடியார்கள் திருக் கூட்டம், இந்திய துணை இராணுவப் படை சிவ பக்தர்கள் ஒருங்கிணைந்த சிவத்தொண்டே உயிர்ப் பணி குழு மற்றும் நால்வர் திரு க்கைலாய வாத்தியக் குழுவின் அடியார்கள் ஒருங்கிணைந்த தேவாரத் திருத்தல யாத்திரை 60 க்கும் மேற்பட்ட சிவனடி யார்களுடன் குடியாத்தம் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.இந்த தேவாரத் திருத்தல யாத்திரையை வேலூர் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ. ஈஸ்வரன் ஐயா மற்றும் பல சிவனடியார்கள், ஆன்மீகத் தொண்டர்கள் முன்னின்று வழியனுப்பி வைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment