காட்பாடி ரயில்வே காலனி குடியிருப்பில் வடநாட்டு இளைஞர் தூக்கு மாட்டி தற்கொலை
வேலூர்,நவ.27-
வேலூர் மாவட்டம், காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் ரயில்வே காலனி குடியிருப்புக்காக புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதிக்குள் சுமார் (வயது 30) மதிக்கத்தக்க வடநாட்டு இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இவரை வேறு யாரேனும் அடித்து கொலை செய்து கயிற்றில் கட்டி தொங்கவிட்டு விட்டு சென்று விட்டார்களா என்று தெரியவில்லை. இது குறித்து கிடைத்த புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே போலீசார் அந்த இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .இறந்தவர் யார் எந்த ஊர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment