பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து விமர்சனம் செய்த தமிழக முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் மறியல் போராட்டம்!
குடியாத்தம் ,நவ 26-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து விமர்சனம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கண்டித்து பாமகவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் புதிய பஸ் நிலையம் அருகில் மறியலில் போராட்டம் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி கே ரவி தலைமை மறியல் போராட்டம் நடைபெற்றது இதில் செயலாளர் வெங்கடேசன் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்பி பாபு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் நகரச் செயலாளர் எஸ் குமார் ஒன்றிய செயலாளர் காமராஜ் விளம்பரதி தினகரன் முகமது பாஷா பாஸ்கர் நகர தலைவர் தண்டபாணி நகர இளைஞரணி செயலாளர் நாகராஜ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி விஜயகுமார் ஒன்றிய தலைவர் ராஜா மற்றும் நகர ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த போலீசார் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி குடியாத்தம் போக்குவரத்து ஆய்வாளர் முகேஷ் குமார் மற்றும் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
பின்னர் மாலை அனைவரையும் விடுவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment