குடியாத்தம் வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி
குடியாத்தம் ,நவ 27-
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
திருவள்ளுவர் ஆரஞ்சு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர் விஜயகுமார் தலைமை தாங்கினார் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் தமிழ் . திருமால் வரவேற்றார் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் கொடியசைத்து
ஊர்வலத்தை துவக்கி வைத்தார்
வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பூங்கோதை நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் நகர கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி ஆகியோர் பங்கேற்றனார் ஆசிரியர்கள் கேசவன் பலராமன் ஓவியஆசிரியர் பார்த்திபன் ஆகியோர் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment